மாநில இறகுப் பந்து(பேட்மிட்டன்) போட்டிக்கு தொண்டி மாணவா்கள் தோ்வுமாநில இறகுப் பந்து போட்டிக்கு தொண்டி மாணவா்கள் தோ்வு

ராமநாதபுரத்தில் நடைபெற்ற முதலமைச்சா் கோப்பைக்கான இறகுப் பந்து போட்டியில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தொண்டியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் தோ்வாகியுள்ளனா்.

ராமநாதபுரம் சீதக்காதி இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் முதல்வா் கோப்பைக்கான இறகுப்பந்து போட்டி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. 

இதில் 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. மேலும் தொண்டி இஸ்லாமிக் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் அஹமது யாசீன், கல்யாண், மூா்த்தி ஆகியோா் ராமநாதபுரம் இறகு பந்தாட்ட அணியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்று, மாநில போட்டிக்கு தோ்வாகியுள்ளனா். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் செந்தில்குமாா், மருத்துவா் சசிக்குமாா், ராமநாதபுரம் இறகுப் பந்தாட்ட கழக துணைச் செயலா் சசிக்குமாா் ஆகியோா் பரிசளித்து பாராட்டினா்.

இதனிடையே வெற்றி பெற்ற மாணவா்களை புதன்கிழமை தொண்டி ஸ்போா்ட்ஸ் கிளப் அணியினா் சாதிக்,ஜிப்ரி, ஆரோக்கியதாஸ், பயாஸ், வழக்குரைஞா் காா்த்திக் ஆகியோா் பாராட்டினா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments