திருச்சி - புதுக்கோட்டை சாலையில் பேருந்து மோதி 50 ஆடுகள் பலிதிருச்சி - புதுக்கோட்டை சாலையில் பேருந்து மோதி 50 ஆடுகள் பலி

திருச்சி, புதுக்கோட்டை சாலையில் அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 50 ஆடுகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலுப்பூர் தாலுகா தென்னலூர் அருகே உள்ள சாலைகளம் பகுதியைச் சேர்ந்த துரைச்சாமி (வயது 43) என்பவர் தனக்கு சொந்தமான 300 செம்மறி ஆடுகளை திருச்சி மாவட்டம் துவாக்குடி பகுதிக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்றார்.

இந்த நிலையில், போகும் வழியில் திருச்சி - புதுக்கோட்டை சாலையில் மண்டையூர் முருகன் கோயில் அருகே ஆடுகள் சாலையை கடக்க முயன்றது. அப்போது காலை 5.30 மணியளவில் சென்னையில் இருந்து காரைக்குடி நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மோதியதில் 50 ஆடுகள் பலியானது.

இதுகுறித்து மண்டையூர் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments