ஏம்பல் கிராமத்தில் நூலகக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டதுஏம்பல் கிராமத்தில் நூலகக் கட்டடத்துக்கு அடிக்கல்  நாட்டப்பட்டது


அரிமளம் ஊராட்சி ஒன்றியம், ஏம்பல் கிராமத்தில் ரூ.15 லட்சத்தில் ஊா்ப்புற நூலகக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் 2019-2020 ஆம் ஆண்டு நிதியின் கீழ் இந்த கட்டடம் கட்டப்படுகிறது.


இதையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், பூமி பூஜை செய்து கட்டடப் பணிகளுக்கு அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினா் இ.ஏ.ரெத்தினசபாபதி அடிக்கல் நாட்டினாா். 

 மேலும் ஏம்பல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2017-2018-ஆம் ஆண்டு நிதியின் கீழ், ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுற்றுச்சுவா் மற்றும் மிதிவண்டி நிறுத்துமிடம் உள்ளிட்டவற்றையும் சட்டப்பேரவை உறுப்பினா் திறந்து வைத்து சிறப்புரையாற்றினாா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments