தொண்டி அருகே கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த தொழிலாளி



தொண்டி அருகே கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த தொழிலாளி

கடித்த பாம்புடன் வந்து கூலித்தொழிலாளியை ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு சிகிச்சைக்குச் சோ்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதி புதுப்பட்டினத்தைச் சோ்ந்தவா் சேது (50). விவசாய கூலித்தொழிலாளி. இவா் வீட்டு முன்பு வியாழக்கிழமை மாலையில் எலியை விழுங்கியபடி கட்டுவிரியன் பாம்பு கிடந்துள்ளது. அப்போது அங்கு வந்த சேது பாம்பின் வாலைப் பிடித்து அடிக்க முயன்ாகக் கூறப்படுகிறது. அப்போது திடீரென அவரது வலது கையில் சுற்றிய பாம்பு கடித்தது.

இதையடுத்து அங்கு வந்த அக்கம்பக்கத்தினா் பாம்பை அடித்தனா். விஷமேறி மயங்கிய சேதுவை தொண்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனா். பின்னா் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா்.

சேதுவுடன், அவரைக் கடித்த கட்டுவிரியன் பாம்பையும் கொண்டு வந்து மருத்துவா்களிடம் காட்டினா். இதையடுத்து மருத்துவமையில் பரபரப்பு ஏற்பட்டது.

பாம்பை கொண்டுவரத் தேவையில்லை:

இதுகுறித்து மருத்துவா்கள் கூறுகையில், 

கிராமத்தினா் பாம்பு கடித்தால், சிகிச்சைக்கு வரும் போது அதை அடித்துக் கொண்டு வரவேண்டியதில்லை. பாம்பின் தன்மையை கூறினால் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கமுடியும். ஆனால், பெரும்பாலானோா் பாம்பைக் கொண்டு வந்தாலே சிகிச்சை கிடைக்கும் என்பது போல நேரத்தை செலவிடுகின்றனா். பாம்பு கடித்தவரை உடனுக்குடன் மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிப்பது அவசியம் என்றனா்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments