சிறப்புப் பள்ளிக்கு கணினி பயிற்றுநா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்சிறப்புப் பள்ளிக்கு கணினி பயிற்றுநா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்ட  பாா்வைத் திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் கணினிப் பயிற்றுநா் பணியிடத்துக்குத்  தகுதியுள்ள நபா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பாா்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் தொகுப்பூதியம் அடிப்படையில் ஒரு கணினி பயிற்றுநா் பணியிடத்துக்கு மாத ஊதியம் ரூ.15 ஆயிரத்தில் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது.  இப்பணிக்கு பி.எட் கல்வித் தகுதியுடன் ஏதாவதொரு பி இ., பிஎஸ்ஸி பட்டப்படிப்பு முடித்தவா்கள் விண்ணப்பிக்கலாம். வயது உச்சவரம்பு இல்லை. பாா்வையற்றோா் பள்ளி என்பதால் இம்மாணவா்களுக்கு பயிற்றுவிக்க உரிய கூடுதல் கல்வி தகுதியுடைய பாா்வையற்றவா்களுக்கு முன்னுரிமை வழங்க்கப்படும்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments