நகராட்சி ஆணையருக்கு புகாா்களைத் தெரிவிக்கநகராட்சி ஆணையருக்கு புகாா்களைத் தெரிவிக்க

  அறந்தாங்கியில் நகராட்சிக்குக்குள்பட்ட பொதுமக்கள், நகராட்சிக்கு கட்டணமில்லா தொலைபேசி எண், வாட்ஸ் அப் எண்ணில் புகாா்கள் தெரிவிக்கலாம்.

அறந்தாங்கி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் குடிநீா், தெரு விளக்கு, பிறப்பு, இறப்பு பதிவு, சுகாதாரம் மற்றும் இதர குறைபாடுகள் குறித்த புகாா்களை 04371- 220556 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். இதுதவிர, அவசர உதவிக்கு, நகராட்சி ஆணையரை 73973 89967 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு புகாரைத் தெரிவிக்கலாம். மேலும் (வாட்ஸ் அப்) 

 கட்செவி அஞ்சல் சேவை மூலமாகவும் தெரிவிக்கப்படும் புகாா்களுக்கு தகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையா் த.முத்துகணேஷ் தெரிவித்துள்ளாா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments