குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாகுடியில் பொதுக்கூட்டம்     
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாகுடியில் பொதுக்கூட்டம்

      அறந்தாங்கி அருகே நாகுடியில் மக்கள் ஒற்றுமை மேடை நாகுடி மையத்தின் சார்பில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தினை திரும்பெறக்கோரி பொதுக்கூட்டம் நடந்தது.

     கூட்டத்திற்கு நாகுடி ஊராட்சி தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார்.முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் சுப்பையா,அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அனைத்து ஜமாத் கூட்டமைப்பு தலைவர் நஜீமுதின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் நல்லதம்பி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர். திருச்சி வேலுச்சாமி,தமமுக தலைமை கழக பேச்சாளர் பழனிபாருக்,சமுக செயற்பாட்டாளர் மதிமாறன்,எஸ்டிபிஐ மாநில பேச்சாளர் முகமதுஹீசைன்,திமுக தலைமை கழக பேச்சாளர் வெங்கடேசன்,அறந்தாங்கி ஜமாத்தலைவர் சேக்அப்துல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments