புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளின்றி பயணிகள் அவதிபுதுக்கோட்டை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளின்றி பயணிகள் அவதி: 24 மணி நேரமும் நாய்கள் சுற்றித்திரியும் அவலம்

   
        புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் எந்தவித அடிப்படை வசதிகள் இல்லாமலும் பாதுகாப்பு இல்லாமலும் இருப்பதால் பயணிகள் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். மேலும் 24 மணி நேரமும் ரயில் நிலையம் பகுதியில் நாய்கள் சுற்றி திரிந்த வண்ணம் இருந்து வருவதால் பயணிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.

       புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு சென்னை எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், சிலம்பு எக்ஸ்பிரஸ், பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ், கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் என பல அதிவிரைவு, சிறப்பு ரயில்கள், பயணிகள் ரயில்கள் என 24 மணி நேரமும் வந்து செல்கின்றனர். இதில் உள்ளூர் பயணிகள், வெளியூர் பயணிகள், வெளிநாட்டினர் என தினசரி புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இதே போல் சரக்கு ரயில்களும் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது.

குறிப்பாக ராமேஸ்வரம், சென்னை, திருச்சி, காரைக்குடிக்கு அதிக அளவில் பயணிகள் வந்து செல்கின்றனர். புதுக்கோட்டையில் பழமையான ஓவியங்களான சித்தன்னவாசல் கலை ஓவியம், திருமயம் கோட்டை, தமிழகத்தின் இரண்டாவது மியூசியம் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் இருப்பதால் சுற்றுலாவாசிகள் ரயில் நிலையம் வந்து செல்கின்றனர்.

இதே போல் புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் பலர் காரைக்குடி, திருச்சியில் இருந்து புதுக்கோட்டை வந்து பணியாற்றி வருகின்றனர். இவர்களும் காலை, மாலையில் ரயில் பயணத்தை மேற்கொள்ள புதுக்கோட்டை ரயில் நிலையம் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் பயணிகள் வந்து செல்லும் ரயில் நிலையத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. குறிப்பாக கழிப்பறை வசதிகள் இல்லை. அங்கு இருக்கும் கழிப்பறையில் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடக்கிறது. இதனை யாரும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில பயணிகள் வேறு வழியின்றி திறந்த வெளியில் செல்கின்றனர். இதனால் பெண் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் அங்கு இயங்கிய கேண்டீன் தற்போது செயல்படாமல் பூட்டி கிடக்கிறது.இதனால் பயணிகள் சாப்பிடுவதற்கு எதுவும் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரயில் நிலையம் வெளியிலும் எந்த ஓட்டலும் இல்லை. தண்ணீர் வசதி ஏதும் இல்லை. தண்ணீர் குடிக்க வேண்டுமெனில் புதுக்கோட்டை நகர் பகுதிக்கு வர வேண்டும். புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் 24 மணி நேரமும் நாய்கள் சுற்றி திரிகிறது.
இதனால் பயணிகள் அச்சத்துடன் ரயில் நிலையத்தில் காத்திருக்கின்றனர். எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் உள்ளது. மேலும் பயணிகள் காத்திருப்போர் அறையும் பூட்டிக்கிடக்கிறது. இதனால் வெட்ட வெளியில் பயணிகள் காத்துகிடக்கின்றனர்.
இதனை விரைந்து சரி செய்ய வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தாமலை, தொண்டைமான் நல்லூர் பகுதியில் இருந்த ரயில் நிலையங்களை மூடிவிட்டனர். இதனால் இந்த பகுதியில் இருந்து ரயிலில் பயணிக்கு திருச்சி அல்லது புதுக்கோட்டையை நோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்பத்துடன் வெளியூர் செல்லும் பயணிகள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இது குறித்து ரயில் பயணிகள் கூறுகையில், புதுக்கோட்டை ரயில்நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
ரயில் நிலையத்தில் இயங்கிய கேண்டீன் தற்போது செயல்படாமல் பூட்டி கிடக்கிறது. இதனால் பயணிகள் சாப்பிடுவதற்கு எதுவும் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரயில் நிலையம் வெளியிலும் எந்த ஓட்டலும் இல்லை. தண்ணீர் வசதியும் இல்லை. தண்ணீர் குடிக்க வேண்டுமெனில் புதுக்கோட்டை நகர் பகுதிக்கு வர வேண்டும்.ரயில் நிலையத்தில் இயங்கிய கேண்டீன் தற்போது செயல்படாமல் பூட்டி கிடக்கிறது. இதனால் பயணிகள் சாப்பிடுவதற்கு எதுவும் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரயில் நிலையம் வெளியிலும் எந்த ஓட்டலும் இல்லை. தண்ணீர் வசதியும் இல்லை. தண்ணீர் குடிக்க வேண்டுமெனில் புதுக்கோட்டை நகர் பகுதிக்கு வர வேண்டும்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments