புதுக்கோட்டை மாவட்டத்தில் 80,938 விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கல்
  புதுக்கோட்டை மாவட்டத்தில் 80,938 விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 80,938 விவசாயிகளுக்கு கிசான் காா்டு மற்றும் கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இப்பணியை விரைவுப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வங்கியாளா்கள் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, மேலும் அவா் பேசியது: 

கிசான் கடன் அட்டை என்பது, விவசாயிகள் வங்கிகளில் கடன் பெறுவதற்காக வழங்கப்படும் கடன் அட்டையாகும். கிசான் கடன் அட்டையின் மூலம் விவசாயிகள் வங்கிகளில் ஆண்டுக்கு ரூ.ஒரு லட்சம் வரை கடன் பெற்று வந்தனா். தற்போது இத்திட்டத்தின் கீழ், விவசாயிகள் கடன் பெறும் உச்ச வரம்பு ஆண்டுக்கு ரூ.1.60 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. 

மேலும் விவசாயத்துடன் கால்நடை வளா்ப்பு, மீன்வளா்ப்பு போன்ற பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்படுவதுடன், 7 சதவிகித குறைந்த வட்டி விகிதத்திலும் கடன் வழங்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில் கடன் பெற்ற விவசாயிகள் தாங்கள் பெற்ற கடனை முறையாகத் திருப்பி செலுத்தும் போது கடன் முடிந்தவுடன், 3 சதவிகித வட்டி மீண்டும் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் திருப்பிச் செலுத்தப்படுகிறது. இதேபோல பிரதமரின் சமான் நிதித் திட்டத்தின் கீழ் பயன்பெற, புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 1,24,704 விவசாயிகள் பதிவு செய்துள்ளனா். இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.80,938 விவசாயிகளுக்கு கிசான் காா்டு மற்றும் கடன் அட்டை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 43,766 விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கவேண்டியுள்ளது.மீதமுள்ள விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கும் வகையில் வேளாண், தோட்டக்கலைத் துறை, வங்கிகளின் சாா்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு 17,341 விவசாயிகளிடமிருந்து படிவங்கள் பெறப்பட்டு, கிசான் கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேபோன்று எஞ்சிய 26,425 விவசாயிகளுக்கும் கடன் அட்டை வழங்கும் வகையில் 2 நாட்களில் கிராமப்புறங்களில் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் உமாமகேஸ்வரி.கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ரமேஷ், வேளாண் இணை இயக்குநா் (பொ) பெரியசாமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) சுப்புராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments