தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கான பணிகள் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து தொடங்க உள்ளன. நாட்டின் முதல் குடிமகனாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதில் இடம் பெறுகிறார்.
டெல்லி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் இருந்து தொடங்க உள்ள நிலையில், அதே நாளில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோரின் பெயர்களும் இதில் இடம் பெற உள்ளன.
மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட விஐபிக்கள் அன்றைய தினம் பதிவட்டில் இடம் பெற உள்ளதாகவும் பதிவுத்துறை ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணைய அலுவலகம் தெரிவித்துள்ளது.
தேசிய மக்கள் பதிவேட்டிற்கு பல்வேறு மாநில அரசுகள், தன்னார்வ அமைப்புகள் எதிர்ப்பும் ஆட்சேபமும் தெரிவித்து வரும் நிலையில் மக்கள் கணக்கெடுப்பு வழக்கமான நடைமுறைதான் என்று உணர்த்தும் வகையில் நாட்டின் மிகப்பெரிய தலைவர்களில் இருந்து இப்பணி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments