தமுமுக ரியாத் மத்திய மண்டலத்தின் இரத்ததான சேவைக்கு பாராட்டுதமுமுக ரியாத் மத்திய மண்டலத்தின் இரத்ததான சேவைக்கு பாராட்டு

சவுதி அரேபியா நாட்டின் சுகாதாரத் துறையின் கீழ் செயல்பட்டு வரும்  கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி  மருத்துவமனையில் இந்திய சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் சவுதி அரேபியா தேசிய தினம் போன்ற தினங்களை முன்னிட்டு  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ரியாத் மண்டலம் சார்பாக கடந்த  ஆண்டுகளில் பல்வேறு இரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டது. மேலும் மருத்துவமனைகளில் ஏற்படும் இரத்த தட்டுப்பாட்டின் போதும் மற்றும் சிகிச்சைக்காக இரத்தம் தேவைபடுபவர்களுக்கும் நமது தமுமுக தொண்டர்கள் தங்களது குருதியை கொடையாக வழங்கி வருகிறார்கள்.


தமுமுகவின் இந்த இரத்ததான சேவையின் மூலம் பல்வேறுபட்ட சகோதரர்கள்  பயனடைந்துள்ளார்கள் என்று கூறினால் மிகையாகாது.

இச்சேவையை பாராட்டி கிங் பஹத் மெடிக்கல் சிட்டி இரத்த வங்கி சார்பாக ரியாத் மத்திய மண்டல தமுமுகவிற்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

பாராட்டு சான்றிதழை இரத்த வங்கியுடனான தொடர்பை சிறப்பான முறையில் செய்து வரும்
ரியாத் மத்திய மண்டல சமூக நலத்துறை துணைச் செயலாளர் அறந்தை சித்திக் அவர்கள்  பெற்றுக்கொண்டார்.

எல்லா புகழும் இறைவனுக்கே!!!


என்றென்றும் சமுதாய பணியில்;;; 

தமிழ் தஃவா தமுமுக - மமக 
சமூக நலத்துறை 
மத்திய மண்டலம் 
ரியாத் - சவூதி அரேபியா
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments