சவூதி அரேபியாவில் இறந்தவரின் உடலை அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்த TNTJ .!



சவூதி அரேபியாவில் பணி புரிந்து வந்த மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த சகோதரர் அருள் குமார் சில நாட்களுக்கு முன்பு சவூதியில் மரணமடைந்ததார்கள், சகோதரரின் உடலை தாயகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து அதற்க்கான பணிகளை சட்ட ரீதியில் ஃபைசல்யா கிளையை சார்ந்த TNTJ சகோதரர்கள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு.
வெள்ளிக்கிழமை (31-01-2020) காலை சென்னை விமான நிலையத்திற்கு அன்னாரின் உடல் கொண்டு வரப்பட்டு அன்னாரின் சொந்த ஊரான வாணகிரி (பூம்புகார்) வரை பிரேதத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என மேலும் கோரிக்கை வைக்கப்பட்டதின் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகத்தின் ஆலோசனை மற்றும் ரியாத் மண்டலத்தின் கோரிக்கையின் பெயரில்.


மாநிலத் தலைமையின் ஆம்புலன்ஸ் மூலமாக, சென்னை விமான நிலையத்தில் அனைத்து சட்ட மற்றும் சுங்க வழி முறைகளும் முடிக்கப்பட்ட பின்னர் சகோதரரின் உடல் வாணகிரிக்கு கொண்டு சேர்க்க அனைத்து வித முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு.

மாநிலத் தலைமை, ரியாத் மண்டலம் மற்றும் நாகை (வடக்கு) மாவட்ட நிர்வாகிகள் உதவியுடன் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இறைவனது திருப்தியை மட்டுமே நாடி பணிகள் மேற்க் கொள்ளப்பட்டு சகோதரின் ஜனாஷா அவரது குடும்பத்தாரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.


மேலும் அச்சகோதரரின் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் நேரில் சென்ற கொள்கை சகோதரர்கள் மூலம் ஆறுதலும் கூறப்பட்டது.

உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் இந்த தன்னலம் பாராத மனித நேயப் பணியைப் பாராட்டி நன்றியை தெரிவித்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

அவரது குடும்பத்தாருக்கு இறைவன் நிம்மதியை தருவானாக! மேலும் இதற்காக உழைப்பு செய்த அனைத்து சகோதரர்களுக்கும் இறைவன் அருள் புரிவானாக!

என்றும் சமுதாயப் பணியில்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
ரியாத் மண்டலம் 
01.02.2020

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments