மதுரை கிழக்கு ஊராட்சி பகுதியில் 5ம் வகுப்பு மாணவியின் கோரிக்கையை மதுரை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் நிறைவேற்றியுள்ளது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
மதுரை கிழக்கு ஊராட்சிகுட்பட்ட மீனாட்சிபுரம் கிராமத்தில் கடந்த கிராம சபை கூட்டத்தின் 5ம் வகுப்பு மாணவி சஹானா கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில், பள்ளிக்கு 7 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டி இருப்பதாக கூறிய மாணவி. தினமும் பள்ளிக்கு சென்று வர பேருந்து வசதி இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு மாணவ, மாணவிகள் ஆளாவதாக குறிப்பிட்டிருந்தார்.
மாணவியின் கோரிக்கை குறித்து அறிந்த மதுரை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் மாணவி சஹானாவை நேரில் சந்தித்து பாராட்டினார்.
பின்னர் மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக (03-02-2020) மாயாண்டிபட்டி முதல் மீனாட்சிபுரம் வரையில் மதுரை போக்குவரத்து பணிமனையிலிருந்து அரசு பேருந்தை இயக்க உத்தரவிட்டார்.
மேலும் தினமும் காலையும் மாலையும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இந்த பேருந்து சேவை தொடர்ந்து கிடைக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
மாணவியின் கோரிக்கையை ஏற்று பேருந்து வசதியை பெற்று தந்த சு.வெங்கடேசன் எம்.பிக்கு கிராம மக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
5ம் வகுப்பு மாணவியின் கோரிக்கையானது மதுரை எம்.பி. சு.வெங்கடேசனுக்கு வீடியோ மூலம் அனுப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.