நாளை 22.03.2020 அரசு பேருந்துகள் இயங்காது: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு



கொரோனா மக்கள் ஊரடங்கு நடவடிக்கையை முன்னிட்டு நாளை 22.03.2020 காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை அரசு பேருந்துகள் இயங்காது என தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இந்தியாவில் மட்டும் கொரோனாவால் 223 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 23 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதுதவிர, ஈரானில் கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளதோடு ஷாப்பிங் மால்கள், வணிக வளாகங்களை மூடும்படியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும்படியும், தனிநபர் சுகாதாரத்தை பாதுகாக்கும்படியும் அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, வருகிற 22ஆம் தேதி நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கிற்கு வலியுறுத்தியுள்ளார். மக்கள் தாமாகவே முன்வந்து இதனை கடைபிடிக்க வேண்டும் எனவும், அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து பொதுமக்கள வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அப்போது பிரதமர் வலியுறுத்தினார்.

இந்நிலையில், கொரோனா மக்கள் ஊரடங்கு நடவடிக்கையை முன்னிட்டு நாளை 22.03.2020 காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை அரசு பேருந்துகள் இயங்காது என தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னதாக, கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களுக்கான எல்லைகள் மூடப்படுவதாக அறிவித்த தமிழக அரசு, அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும், அந்த வாகனங்களில் வரும் நபர்கள் அனைவருக்கும் நோய்த்தடுப்பு சோதனைக்கு உட்படுத்தப்படுவர், வாகனங்களும் நோய்த்தடுப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments