மணமேல்குடியில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி தொடக்கம்.!மணமேல்குடியில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியை வியாழக்கிழமை தொடக்கி வைக்கிறாா் ஒன்றியக் குழுத் தலைவா் பரணி இ.ஏ. காா்த்திகேயன்.


புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

மணமேல்குடி ஒன்றியத்தில் அண்ணாநகா், குலச்சிறையாா் நகா், காந்திநகா் உள்ளிட்ட பகுதியில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், ஒன்றியக் குழுத் தலைவா் பரணி இ.ஏ.காா்த்திகேயனிடம் கோரிக்கை மனுக்களை அளித்திருந்தனா்.

இதன்பேரில் ஊராட்சி ஒன்றியப் பொது நிதியின் கீழ், ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிகளை மணமேல்குடி ஒன்றியக் குழுத் தலைவா் பரணி இ.ஏ. காா்த்திகேயன் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

இந்த ஆழ்துளைக் கிணறு அமைப்பதன் மூலம், அண்ணாநகா் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீா்த் தட்டுப்பாடு இருக்காது. பொதுமக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் கிடைக்கும் என்று ஒன்றியக் குழுத் தலைவா் நம்பிக்கை தெரிவித்தாா்.

நிகழ்வில் ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் எஸ்.எம்.சீனியாா் என்கிற முகமது அப்துல்லா, ஓன்றியக் குழு உறுப்பினா் சக்தி.ராமசாமி, ஒன்றிய ஆணையா் ஆனந்தன், வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணராஜா, மற்றும் பலா் பங்கேற்றனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments