கரோனா- இந்தியாவில் பலி 2 ஆக உயர்வு..!டெல்லி மூதாட்டி உயிரிழப்பை தொடர்ந்து இந்தியாவில் கரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

 இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 76லிருந்து 81 ஆக அதிகரித்துள்ளது. 64 இந்தியர்கள், 16 இத்தாலியர்கள், கனடாவை சேர்ந்த ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாநில அரசுகளும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளன. அதேபோல் தியேட்டர்கள், பூங்காக்கள், மால்கள் மூட உத்தரவிட்டுள்ளனர். 

இந்த நிலையில் டெல்லியைச் சேர்ந்த 69 வயதான மூதாட்டி ஒருவர் கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை மத்திய சுகாதாரத்துறையும், டெல்லி மாநில அரசும் உறுதி செய்தது. இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.  ஏற்கனவே கர்நாடக மாநிலம் கல்புர்கியை சேர்ந்த 76 வயது முதியவர் கரோனாவால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே சென்னையில் உள்ள 60% ஐடி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தியுள்ளது. டிசிஎஸ் போன்ற நிறுவனங்களில் பணியாளர்கள் தெர்மல் சென்சார் மூலம் சோதிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். அலுவலகத்தில் கூட்டமாக உணவருந்தாமல், தனியாக உணவு அருந்த ஐடி நிறுவன ஊழியர் கூட்டமைப்பு பணியாளர்களை அறிவுறுத்தியுள்ளது. 
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments