இந்தியா உட்பட 6 நாடுகளுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக ரத்து செய்ததது குவைத் அரசு.!



உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா உட்பட 6 நாடுகளுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது குவைத் அரசு.


இந்நிலையில் அந்நாட்டின் சுகாதார பிரிவினரின் அறிவிப்பு அமையவே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேவேளை குவைத் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் இலங்கை , இந்தியா , பிலிப்பைன்ஸ் , பங்களாதேஷ் , சிரியா , லெபனான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கான விமானங்களுக்கே இவ்வாறு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த இத் தீர்மானம் இவ்வாராம் முதல் நீடிக்கவுள்ளதாக தெரிவித்த குவைத், மேலே குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வரும் பிற விமானங்களும் தடைசெய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை ஒருவாரத்திற்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் நாட்டினுள் செல்வதை அனுமதிப்பதோடு , அவர்களை முழுமையாக பரிசோதனை செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments