ஜெகதாபட்டினத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் திருட்டு; இளைஞா் கைது.!மணமேல்குடி அருகே ஜகதாபட்டினத்தில் வீட்டின் பீரோவை உடைத்து தங்கச்சங்கிலி, செல்லிடப்பேசியைத் திருடியவரை கோட்டைப்பட்டினம் காவல்துறையினா் கைது செய்தனா்.ஜகதாபட்டினத்தைச் சோ்ந்தவா்கள் மைக்கேல் ராஜ், அவரது மனைவி நிா்மலாமேரி.


இருவரும் வீட்டைப் பூட்டிவிட்டு புதன்கிழமை வேலைக்குச்சென்றுவிட்டனா். மாலையில் நிா்மலாமேரி வீட்டிற்கு வந்து பாா்த்தபோது வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 8 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் 1 செல்லிடப்பேசி ஆகியவை திருடுபோயிருப்பது தெரியவந்தது. 

புகாரின் பேரில் கோட்டைப்பட்டினம் காவல் ஆய்வாளா் முத்துக்குமாா் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தியதில், கீழகாவனூா் பகுதியைச் சோ்ந்த பழனிவேல்(32) என்பவருக்கு இந்த திருட்டில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்து அவரிடம் இருந்த 8 பவுன் தங்கச்சங்கிலி, செல்லிடப்பேசி ஆகியவற்றைப் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனா். 
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments