முஸ்லீம்கள் கொல்லப்படுகிறார்கள்.. தனித்து விடப்படுவீர்கள்.. இந்தியாவிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை !இந்தியாவில் இந்திய முஸ்லீம்கள் கொன்று குவிக்கப்படுவது உலகம் முழுக்க இருக்கும் இஸ்லாமியர்களை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது, என்று ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி டிவிட் செய்துள்ளார்.


டெல்லி கலவரம் காரணமாக இந்தியா ஈரான் இடையே கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்டு உறவில் இதனால் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. டெல்லி கலவரத்தை ஈரான் கடுமையாக கண்டித்து கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த வாரமே டெல்லி கலவரம் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாத் ஷெரிப் இது தொடர்பாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதில், இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வரிசையாக கட்டவிழ்த்து விடப்படும் திட்டமிடப்பட்ட வன்முறைகளை ஈரான் கண்டிக்கிறது என்று குறிப்பிட்டார்.

பல நூறு வருடங்களாக இந்தியாவும், ஈரானும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். இந்தியா அரசும் அதிகாரிகளும் இந்தியாவில் இருக்கும் எல்லோரும் நன்றாக இருக்க முயற்சிகளை எடுக்க வேண்டும், என்றுள்ளார். மேலும் அவர் தனது கண்டனத்தில் முட்டாள்தனமான அறிவற்ற குண்டர்களை வளர விட கூடாது, என்று மிகவும் கடுமையாக சாடி இருந்தார்.

இந்த நிலையில் டெல்லி கலவரம் குறித்து தற்போது ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி டிவிட் செய்துள்ளார். அதில் இந்தியாவில் இந்திய முஸ்லீம்கள் கொன்று குவிக்கப்படுவது உலகம் முழுக்க இருக்கும் இஸ்லாமியர்களை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இந்திய அரசு, இந்தியாவில் இருக்கும் இந்து தீவிரவாதிகளை ஒடுக்க வேண்டும். அவர்களின் கட்சிகளை அடக்க வேண்டும்.

இந்திய இஸ்லாமியர்களை கொன்று குவிப்பதை அவர்கள் நிறுத்த வேண்டும். இந்தியா உலக நாடுகளில் இருந்தும், உலக இஸ்லாமியர்களிடம் இருந்தும் தனித்து விடப்படுவதை தவிர்க்கும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த டிவிட் பெரிய அளவில் வைரலாகி பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

அயத்துல்லா ஈரானில் மிகவும் வலிமையான தலைவர் ஆவார். ஈரான் ராணுவம் இவரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. பெரிய பாதுகாப்பு, ராணுவம் சார்ந்த முடிவுகளை இவர்தான் எடுப்பார்.இவர் தனது டிவிட்டை ஆங்கிலம், உருது, பெர்ஷியன், அரபி ஆகிய மொழிகளில் எல்லோருக்கும் புரியும்படி டிவிட் செய்துள்ளார். அதோடு டெல்லி கலவரத்தில் அப்பாவை இழந்து கண்ணீர்விடும் சிறுவனின் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments