A-பிரிவு ரத்த வகை கொண்டவர்களையே கொரோனா அதிகம் தாக்குகிறது: சீன மருத்துவர்கள் விளக்கம்.!



சீனாவில் கொரோனா பாதித்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஏ பிரிவு ரத்தவகை கொண்டவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

சீனாவின் ஊஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்திவருகிறது. இதுவரையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,000-த்தைத் தாண்டியுள்ளது. இந்தநிலையில், ஊஹான் மற்றும் ஷென்ஷென் பகுதியில் கொரோனாவால் பாதித்த 2,000 பேரின் ரத்த மாதிரிகளைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில், ஏ ரத்த வகை கொண்டவர்கள்தான் அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏ ரத்த வகை கொண்டவர்களுக்குதான் பாதிப்பும் அதிகம் உள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தெரிவித்த ஆய்வாளர்கள், ‘இது தொடக்க நிலை ஆய்வுதான். இன்னும் தீவிரமான ஆய்வுகள் தேவைப்படுகின்றன. அரசு மற்றும் மருத்துவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களைக் கையாளும்போது ரத்த மாதிரி வகைகளைக் கருத்திக் கொள்ள வேண்டும். ஏ ரத்த மாதிரிகள் கொண்டவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு அதிகம் தேவை, அதேபோல, ஓ ரத்த வகை கொண்டவர்களுக்கு பாதிப்பு குறைவாக உள்ளது. இதற்கு முன்னர் வந்த சார்ஸ் வைரஸூம் ஏ ரத்த வகை கொண்டவர்களையே அதிகம் தாக்கியது. கொரோனாவும் சார்ஸ் குடும்பத்தைச் சார்ந்ததுதான்’ என்று வலியுறுத்தியுள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments