திருப்பூரில் பதவிக்காக தன்னை தானே தாக்கிக்கொண்டு நாடகமாடிய இந்து மக்கள் கட்சி நிர்வாகி-அம்பலமானது நாடகம்.!



திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பகவான் நந்து. இவர் இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளராக இருக்கிறார்.


அவர் கடந்த செவ்வாயன்று, இரவு கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்கு செல்லும் போது அவரது இரு சக்கர வாகனத்தை மறித்து 7 பேர் கொண்ட கும்பலால்  தாக்கபட்டதாக நேற்று செய்தி வெளியானது. தாக்குதலை தொடர்ந்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நந்து.

மருத்துவமனைக்கு வெளியே நூற்றுக்கணக்கான இந்துத்துவாவினர் கூடினர். வழக்கம் போல் விசாரணை எல்லாம்  நடைபெறும் முன்னரே இதை முஸ்லிம்கள் தான் செய்துள்ளனர் என்ற விஷம வெறுப்பு பிரச்சாரத்தை கையில் எடுத்தது இந்துத்துவா பரிவாரங்கள்.


முஸ்மில்களின் மீது பொய் குற்றச்சாட்டு.. வெறுப்பு பிரச்சாரம்

இந்நிலையில் தற்போது இந்த சம்பவம் குறித்து வண்டவாளம் வெளியாகியுள்ளது. கட்சியில் பதவி கிடைக்க, அரசியல் வாழ்வில் அடுத்தகட்டத்திற்கு நகரவும் தான் பகவான் நந்து தனது ஓட்டுனரை வைத்து தன்னை தானே தாக்கி கொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனை அடுத்து போலீசார் நந்துவின் மீதும் அவரது ஓட்டுநர் மற்றும் இந்த நாடகத்தை அரங்கேற்றிய இந்துத்துவாவினர் மீதும் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

இந்துத்துவாவினர் இவ்வாறு நாடகமாடி தன்னை தானே தாக்கி கொள்வது, தனது வீட்டில் தானே குண்டு வீசி கொள்வது என செய்வது வாடிக்கை ஆகிவிட்டது என பொதுமக்கள் வெறுப்பில் உள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments