கோபாலப்பட்டிணம் ஷாகின் பாக் போராட்டக்காரர்களுக்கு உணவு சமைத்து பரிமாறிய அரசநகரிப்பட்டினம் வளர்பிறை நற்பணி மன்ற சகோதரர்கள்..!குடியுரிமை திருத்த சட்டம் திரும்பபெற கோரியும் CAA- NRC- NPR எதிராகவும் நாடுமுழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தியா மற்றும் தமிழகம் முழுவதும் ஷாகின் பாக் தொடர் இருப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றன.


அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் தொடர் ஷாகின் பாக் (தொடர் காத்திருப்புப் போராட்டம்) 01.03.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று முதல் கோபாலப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலை VIP நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், இந்தச்  சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

9-வது (09.03.2020) நாள் தொடர் இருப்பு போராட்டக்காரர்களுக்கு உணவு சமைத்து வந்து பரிமாறிய அரசநகரிப்பட்டினம் வளர்பிறை நற்பணி மன்ற சகோதரர்கள்...தொடர் இருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், ஆதரவு தெரிவித்து வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கும் தினமும் உணவு தயாரித்து கோபாலப்பட்டிணம் மக்கள் வழங்கி வருகின்றனர். ஆனால் நேற்றைய தினம் 09.03.2020 திங்கள்கிழமை அன்று அரசநகரிப்பட்டினம் வளர்பிறை நற்பணி மன்றம் சார்பில் மூன்று நேர உணவுகளை சமைத்து வந்து உணவு வகைகளை பொறுமையுடனும், அக்கறையுடனும் வளர்பிறை நற்பணி மன்ற உறுப்பினர்கள் பரிமாறிய விதம் போராட்டக்காரர்களை நெகிழச் செய்துள்ளது.

இந்த வளர்பிறை நற்பணி மன்றம் அரசநகரிப்பட்டினத்தில் பொது சேவைகளை செய்து வருவது குறிப்பித்தக்கது.

இந்த போராட்டத்தில் அதிகமான ஆண்களும், பெண்களும், சிறுவர்களும்  என திரளானோர்  அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments