கிருஷ்ணாஜிப்பட்டினத்தில் SDPI கட்சி நடத்தும் தர்ணா போராட்டம்..!!நாடு முழுவதும் குடியிரிமை திருத்த சட்டத்திற்க்கு எதிராக நடந்து கொண்டிற்க்கும் போரட்டத்தின் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிப்பட்டினத்தில் SDPI கட்சியின் சார்பாக 6-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை தர்ணா போராட்டம் நடந்து வருகிறது.


இந்நிலையில் நேற்று (09/03/2020) திங்கள்கிழமை அன்று அனைத்து அரசியல் கட்சி மற்றும் இயக்கங்ளின் தலைவர்களை முன்னிலைப்படுத்தி குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தர்ணா போராட்டம் நடைபெற்றது.இதில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் நாச்சிகுளம் தாஜ்தீன்,SDPI கட்சியின் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பொதுச் செயலாளரும் செரியலூர் ஊராட்சி மன்றத் தலைவருமான ஜியாவுதீன் மற்றும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாநில பொருளாளர் ரியாஸ் அஹமத் மற்றும் திமுக, விசிக,நாம் தமிழர் மற்றும் அனைத்து கட்சியின் நிர்வாகிகளும் உரையாற்றினார்.

இப்போராட்டத்தில் ஆண்கள் ,பெண்கள் குழந்தைகள் உள்பட 300-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments