குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்



இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலையம் முன்பு திருத்துறைப்பூண்டி வக்கீல்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல்கள் சங்க தலைவர் அருட்செல்வன் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் துளசிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக திருத்துறைப்பூண்டி ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தலைமை தபால் நிலையத்தை அடைந்தனர். 

குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments