கோபாலப்பட்டிணம் நுழைவாயிலில் கொரோனாவை தடுக்க கிருமி நாசினி, சோப் ஏற்பாடு செய்த கோபாலப்பட்டிணம் ஷாஹீன் பாக் ஒருங்கிணைப்பாளர்கள்..!சீனாவில் உருவான கொரோனா வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவி உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கிறது.


கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனா உள்ளிட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர்.

இந்தியாவில் தொடக்கத்தில் இருந்தே கொரோனா வைரஸ் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பெரிதும் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசு மேற்கொண்டு வருகிறது

அந்தவகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் இன்று 22.03.2020 ஞாயிற்றுகிழமை இரவு 8.00 மணியளவில் அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் வகையில் மீமிசல் SBI வங்கி அருகாமையில் (கோபாலப்பட்டிணம் நுழைவாயில்) ஊருக்குள் வருபவர்கள் மற்றும் வங்கிக்கு செல்லக்கூடிய நபர்கள் கையை சுத்தம் செய்து கொள்வதற்காக தண்ணீர் டேங்க் அமைத்து அங்கு கிருமி நாசினி மற்றும் சோப்பு ஆகியவை கோபாலப்பட்டிணம் ஷாஹீன் பாக் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கையை எப்படி சுத்தம் செய்து நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பது போன்ற விழிப்புணர் செய்யப்பட்டது.மேலும் அங்கு வைக்கப்பட்டுள்ள தண்ணீர் டேங்கில் கொரோனா வைரஸ் தொற்று பற்றி பதாகை ஓட்டப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments