சுய ஊரடங்கு உத்தரவு: ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிய கோபாலப்பட்டிணம் TNTJ கிளை.!கோபாலப்பட்டிணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை நிர்வாகிகள் மீமிசல் பகுதியில் ஆதரவற்றவர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட் பாக்கெட்கள்,பிரெட் போன்றவைகளை அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று கொடுத்தனர்.


உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 341 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் இன்று 22.03.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு தொடங்கிய சுய ஊரடங்கு இரவு 9.00 மணி வரை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.00 மணிக்கு நிறைவடைய இருந்த சுய ஊரடங்கு  திங்கள்கிழமை காலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்கள் நலன் கருதி அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு தரும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீமிசலில் சாலையோரம் வசிப்பவர்கள்,கோவிலில் இருப்பவர்கள்,மருத்துவமனை ஆகிய இடங்களில் உள்ள மக்களுக்கு தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட் பாக்கெட்கள்,பிரெட் போன்ற உணவு பண்டங்களை கோபாலப்பட்டிணம் TNTJ கிளை சார்பில் வழங்கப்பட்டது.

பிறர்நலம் நாடுவதே இஸ்லாம்.. நபி (ஸல்)

என்றும் சமுதாயப்பணியில்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
கோபாலப்பட்டிணம் கிளை,
புதுக்கோட்டை மாவட்டம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments