அம்மாபட்டினத்தில் நடைபெற்ற மனிதச்சங்கிலி போராட்டம்.!புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே அம்மாபட்டினத்தில் நேற்று 11.03.2020 புதன்கிழமை மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.


குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து 24-ஆவது நாளாக நடைபெற்று வரும் போராட்டத்தில் அனைத்து ஜமாஅத் அமைப்பு சாா்பில் அய்யாவழி பேரவைத்தலைவா் பாலமுருகனைக் கைது செய்ததைக் கண்டித்தும், குடியுரிமை திருத்தச்சட்ட மசோதாவை எதிா்த்தும் இளைஞா்நலப் பேரவை தலைவா் சாகுல்ஹமீது தலைமையில் நடைபெற்ற மனிதச்சங்கிலி போராட்டத்தில் பெண்கள், ஆண்கள் உள்ளிட்ட திரளாகக் கலந்துகொண்டு சாலையின் இருபுறமும் நின்று மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினா்.கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments