அதிராம்பட்டிணத்தில் கைதான மாணவர்களை விடுவிக்கக்கோரி பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் சாலை மறியல் (படங்கள்)குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆா்) ஆகியவற்றை திரும்பப் பெறாத மத்திய அரசைக் கண்டித்தும், சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர்-க்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்தும் சாலை மறியல் போராட்டம் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் புதன்கிழமை மதியம் நடைபெற்றது.


இதையடுத்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.


இந்நிலையில், மாணவர்களின் கைதைக் கண்டித்து பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் கிழக்கு கடற்கரைச் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். கைதான மாணவர்களை உடனடியாக விடுவிக்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.


இதுகுறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து, பொதுமக்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments