கொரோனா அச்சம் காரணமாக, ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகம் கூடுவதை தவிர்க்கும் விதத்தில், குடும்ப அட்டைதாரர்களுக்கு சுழற்சி முறையில் அத்தியாவசியப் பொருள்களை விநியோகிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, தமிழகம் முழுவதிலும் உள்ள ரேஷன் கடை அதிகாரிகள், ஊழியர்களுக்கு தமிழக அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக, நுகர்வோர் பணிகள் துறை கூடுதல் பதிவாளர் பிறப்பித்துள்ள உத்தரவு விவரம்:
அனைத்து ரேஷன் கடைகளும் உரிய நேரத்தில் திறக்கப்பட வேண்டும். ரேஷன் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் (Mask) அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ரேஷன் கடை ஊழியர்களுக்கும், கடைகளுக்கு வரும் நுகர்வோருக்கும் தேவையான கிருமிநாசினியை (Hand Sanitizer) போதுமான அளவு கையிருப்பில் வைத்திருப்பதை கடை நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.
ரேஷன் கடைகளில் பொருள்களை வாங்க மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள் சுழற்சி முறையில் வழங்கப்பட வேண்டும்.
நியாய விலைக் கடைகளுக்கு வரும் குடும்ப அட்டைதாரர்கள் ஒருவரோடு ஒருவர் நெருங்கி நிற்பதைத் தவிர்க்கும் விதமாக தனிமைப்படுத்தல் (social Distancing) என்னும் நடைமுறையை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்கள், பொது விநியோகத் துறையின் அனைத்து துணைப் பதிவாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments