கொரோனா எதிரொலி: மின் கட்டணம் செலுத்த சலுகை : தமிழக மின் வாரியம் அறிவிப்பு.!கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, வீடுகளில் 'கரண்ட் ரீடிங்' எடுக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளதால், மார்ச் மாதத்துக்கான 'கரண்ட் பில்' கட்டுவது தொடர்பாக நுகர்வோருக்கு மின்சார வாரியம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.


அதன்படி, கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, 2020 மார்ச் மாத பட்டியலுக்கு, 22 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை, மீட்டர் ரீடிங் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஜனவரி, பிப்ரவரி மாத கணக்கீட்டின்படியே, நுகர்வோர் பணம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கூடுதலாகவோ, குறைவாகவோ செலுத்தப்படும் கட்டணம், பின்வரும் மாத கணக்கீட்டு மின்கட்டணத்தில் சரி செய்யப்படும்.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மின்கட்டணத்தை செலுத்த நுகர்வோர் நேரடியாக மின்வாரிய அலுவலக மையங்களுக்கு வருவதை தவிர்த்து, இணையதளம், மொபைல் செயலி ஆகியவற்றின் மூலம் மின்கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள வீடுகள், கடைகளில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் ஊழியர்கள் கரண்ட் ரீடிங் எடுத்து வருகின்றனர்.ரீடிங் எடுத்த நாளில் இருந்து 20 தினங்களுக்குள் நுகர்வோர் மின்கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லையென்றால், மின் இணைப்பு துண்டிக்கப்படும். பின்னர் அபராதத் தொகையுடன் கட்டணத்தை செலுத்திய பின்னரே, மீண்டும் மின் விநியோகம் தரப்படும்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, தற்போது பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத நிலை உள்ளதால், மார்ச் மாதம் மின்கட்டணம் செலுத்துவது தொடர்பாக மின்வாரியம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments