ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மீண்டும், செக் பவர்.!



மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணங்களை செலுத்துவதற்கு மட்டும், ஊராட்சி தலைவர்களுக்கு, காசோலையில் கையெழுத்திடும் அதிகாரமான, 'செக் பவர்' வழங்கப்பட்டுள்ளது.


ஊரக உள்ளாட்சி அமைப்புகளில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஊராட்சி தலைவர்களுக்கான, காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் ரத்து செய்யப்பட்டது. செலவு அனுமதி கோரி, ஊராட்சி தலைவர், ஊராட்சி துணைத் தலைவர் கையொப்பமிட்டு அனுப்பினால், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரிபார்த்து, வங்கி கணக்கு வாயிலாக பரிவர்த்தனை செய்யும், 'ஆன்லைன்' முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.மாநில நிதிக்குழு மானியமாக, ஒவ்வொரு ஊராட்சிக்கும், 40 ஆயிரம் ரூபாய் முதல், 3 லட்சம் ரூபாய் வரை, மாதம்தோறும் வழங்கப்படும்.

இதை, மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணத்துக்கு மட்டுமே, பயன்படுத்த முடியும். மாநிலம் முழுவதும், ஊராட்சிகளில் குடிநீர் மற்றும் மின் கட்டணம் அதிகளவில் நிலுவையில் உள்ளது. 'ஆன்லைன்' பரிவர்த்தனையால், கட்டணம் செலுத்துவதில், கால தாமதம் ஏற்படும். எனவே, இந்தக் கட்டணங்களை, 'செக்' வாயிலாக செலுத்துவதற்கு மட்டும், ஊராட்சி தலைவர்களுக்கு, தற்போது அதிகாரம் வழங்கப்பட்டுஉள்ளது. ரத்து செய்யப்பட்ட அதிகாரம், மீண்டும் கிடைத்துள்ளதால், ஊராட்சி தலைவர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments