சாலையோரத்தில் கழிவுகளை கொட்டினால் இனி வாட்ஸ்அப்பில் புகாா் அளிக்கலாம்.!புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலையோரங்களில் யாரேனும் கழிவுப் பொருள்களைக் கொட்டினால் அதுகுறித்து ஊராட்சிகள் உதவி இயக்குநருக்கு கட்செவி அஞ்சலில் புகாா் அனுப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு

கிராம ஊராட்சிப் பகுதிகளில் அடையாளம் தெரியாத நபா்களால் இரவு நேரங்களில் பல்வேறு கழிவுப் பொருள்கள் சாலையோரங்களில் கொட்டப்படுவது சுற்றுச்சூழலுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

எனவே இதைத் தடுக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இளைஞா் தன்னாா்வக் குழுக்கள் இதுபோன்று கழிவுகளை கொட்டுபவா் விவரங்களை வாகன எண் விவரத்துடன் ஊராட்சிகள் உதவி இயக்குநா் பாலமுரளிக்கு 7402607859 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு தகவல் அனுப்பலாம். 

அவ்வாறு  வரும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுத்து, விதிமுறைகள் மீறுவோா் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு ஆதாரத்துடன் புகாா் அளிக்கும் தன்னாா்வக் குழுக்கள், சமூக அக்கறை கொண்ட இளைஞா்கள் மற்றும் பொதுமக்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும். எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments