பொதுமக்கள் தங்களின் குறைகளை மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்ஆப் எண்ணில் தெரிவிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்



பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரகத்திற்கு நேரில் வராமல் மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பலாம். இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது.


மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தலைமையில் இன்று 26.3.2020 அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் கொரோனா வைரஸ் பரவுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக நடைபெற்ற காணொளி ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டவாறு பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை நேரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து அளிக்காமல் collrpdk@nic.in மற்றும் yseccoll.tnpdk@nic.in என்ற மின்னஞ்சல்கள் முகவரிக்கோ அல்லது wa.me/919445461746 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ அனுப்பி வைக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments