திருச்சி- மலேசியா இரு விமானங்கள் ரத்து.!திருச்சியில் இருந்து மலேசியா செல்லும் இரு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸால் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தினமும் திருச்சியில் இருந்து மலேசியா செல்லும் 2 ஏர் ஏஷியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. திருச்சி மற்றும் மலேசியா இடையே ஏப்ரல் 15-ஆம் தேதி வரை தினமும் ஒரு விமானம் மட்டுமே இயக்கப்படும் என ஏர் ஏஷியா நிறுவனம் அறிவித்துள்ளது. கரோனா வைரஸ் தாக்கம், பயணிகள் எண்ணிக்கை குறைவு உள்ளிட்ட காரணங்களால் இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments