மீமிசல் அருகே அரசநகரிபட்டினத்தில் பலத்த காற்றுடன் கனமழை: 100 ஆண்டு பழமையான புளியமரம் வேரோடு சாய்ந்தது; கிராமங்கள் இருளில் மூழ்கின!




மீமிசல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இந்த மழையின் காரணமாக, அரசநகரிபட்டினம் பகுதியில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த  புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்தது.

மேலும் அந்த பகுதியில் மின் கம்பம் ஒன்று முறிந்து விழுந்தன. இதன் காரணமாக அரசநகரிபட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள் முற்றிலும் இருளில் மூழ்கின.

இதுமட்டுமின்றி, சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றின் வேகம் தாங்காமல் மரங்களும், மின் கம்பங்களும் சரிந்து விழுந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.



எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments