பாகிஸ்தானின் 'ஹீரோ' பலரை காப்பாற்றிய இளம் மருத்துவர் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழப்பு.! படிப்பினை என்ன.?



இந்தியாவைப் போலவே பாகிஸ்தானிலும் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து பலரையும் காப்பாற்ற காரணமாக இருந்த இளம் மருத்துவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.


உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயால் இதுவரை உலகம் முழுவதும் 16558 பேர் உயிரிழந்துள்ளனர். 381649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் சுமார் 500 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. 9 பேர் இதுவரை இறந்துள்ளனர்.

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்று நோய் 881 பேருக்கு பரவி உள்ளது. அங்குள்ள சிந்து மாகாணம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இருப்பதிலேயே அதிகபட்சமாக 394 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் அங்கு 150 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இதுவரை ஒரு மருத்துவர் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். 

உயிரிழந்த மருத்துவர் உஷாமா ரியாஸ், பாகிஸ்தானின் கில்ஜித் பலுசிஸ்தானில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். கொரோனா அறிகுறி உள்ள நோயாளிகளை சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பரிசோதித்ததால் அவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. பலரையும் சாவில் இருந்து காப்பாற்றினார். இந்நிலையில் கொரோனா தாக்குதலுக்கு மருத்துவரே பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் மருத்துவர்கள் உயிரிழக்காமல் தடுக்க போதிய n95 மாக்ஸ்குகள் மற்றும் தடுப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று மருத்துவர்கள் உருக்கமாக கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

படிப்பினை:

மருத்துவர் உயிரையே பறித்த கொரோனா.. கவனம் மக்களே..! கொரோனாவுக்கு வயது வித்யாசம் என்று ஒன்று இல்லை. ஒரு வயது முதல் நூறு வயது வரை உள்ள அனைவருக்கும் வர வாய்ப்புள்ளது. எனவே முக்கியமான வேலையைத் தவிர மற்ற நேரங்களில் வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம். மேலும் அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வீட்டில் இருங்கள்.

#வீட்டில்_இருங்கள் #தனித்து_இருங்கள் #தூய்மையாய்_இருங்கள் 
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments