அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர் உடன் நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று மதியம் 1.00 மணி முதல் வரும் செப். 18ம் தேதி மதியம் 1.00 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழக அரசு பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துநர் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் 812 ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.
மேற்கொண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், தமிழ், ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும், கனரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் வைத்திருக்க வேண்டும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - விழுப்புரம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - கும்பகோணம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - சேலம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - கோவை, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - மதுரை, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - திருநெல்வேலி. ஆகிய இடங்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் போக்குவரத்து துறை அமைச்சகத்தால் நியமிக்கப்படுகின்றனர்.
விழுப்புரம் கோட்டம் நீங்கலாக, மற்ற கோட்டங்களில் காலியாக உள்ள 812 ஓட்டுநர் உடன் நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது அந்த வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் உடன் நடத்துனர் 812 காலி பணியிடங்களை நிரப்புதவற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
கல்வித் தகுதி :-
டிரைவர் பணியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
கண்டக்டர் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான தகுதியான லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.
கனரக வாகனம் ஓட்டுவதில் 18 மாதங்கள் அனுபவம் கண்டிப்பாக வேண்டும்.
நடத்துனர் லைசென்ஸ் இருக்க வேண்டும்.
வயதுவரம்பு:-
ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 24 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இந்நிலையில் 18.08.2023 முதல் http://www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் உடன் நடத்துநர் பதவிக்கு தகுதியுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இப்பதவிக்கு இன்று மதியம் 01.00 மணி முதல் 18.09.2023 மதியம் 01.00 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
நியமனம் தொடர்பான அனைத்து விபரங்களும் http://www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்திலேயே பதிவிடப்பட்டுள்ளது.
இப்பதவிக்கான நியமனம் முற்றிலும் வெளிப்படை தன்மை உடையதாக இருக்கும் எனவும், தகுதியின் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்யப்படும் என்றும், தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, ஓட்டுநர் உடன் நடத்துநர் திறன் தேர்வு (Practical) மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஆன்லைனில் விண்ணப்பிக்க:-
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
18.09.2023
மேலும் விவரங்களுக்கு:-
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.