அதிரை ஷாஹின் பாக் அருகே சுற்றி திரிந்த மர்ம நபர் ~ இருவர் தப்பி ஓட்டம்..?தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சி.ஏ. ஏ ஏன்.ஆர்.சி என்.பி.ஆர் போன்ற கருப்பு சட்டங்களுக்கு எதிராக கடந்த 16 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் அதிராம்பட்டினம் ஜாவியா பள்ளி அருகில் நடைபெற்று வருகிறது.


நேற்று புதன்கிழமை இரவு 10.30 மணியவில் போராட்ட நிகழ்வுகள் வழக்கம் போல் நிறைவு செய்தனர். சரியாக 11 மணியளவில் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி அருகில் இருவர் சந்தேகம் படும்படி உலவினர். இதனை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் அதில் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். ஒருவர் அப்பகுதியில் இருந்து தப்பி ஓடினார்.

பின்னர் அவரிடம் விசாரணை செய்து அதிரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து அதிராம்பட்டினம் காவல் அதிகாரி விசாரணை செய்து வருகின்றனர்.

Source: http://adiraimedia.in/archives/14811
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments