கோபாலப்பட்டிணத்தில் 5-ஆம் நாள் தொடர் போராட்டம் – தமீமுன் அன்சாரி MLA பங்கேற்பு !(படங்கள்)CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராகவும், அதனை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் கோபாலப்பட்டிணத்தில் ஷாஹீன் பாக் பாணியில் இன்று 5-வது நாளாக தொடர் போராட்டம் கோபாலப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலை VIP நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.


இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமுதாய இயக்கங்களின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தி வருகின்றனர்.

அந்த வகையில் இன்று 5-வது நாள் தொடர் போராட்டத்தில் நாகை சட்டமன்ற உறுப்பினரும், மஜக பொதுச்செயலாளருமான தமீமுன் அன்சாரி MLA பங்கேற்று கண்டன எழுச்சியுரையாற்றினார்.

தொடர்ந்து நடைபெற்று வரும் இப்போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் என பலர் பங்கேற்று CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments