தொண்டியில் கொரோனா வைரஸ்..? என பரவும் ஆடியோவின் உண்மை என்ன.?தொண்டியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது என்ற செய்தி வதந்தியாகும்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் கொரோனோ வைரஸால் ஒருவர் பாதிப்பு என்ற செய்தி நேற்று முதல் காட்டுத் தீயாக பரவி வருகிறது. இந்த செய்தியானது முற்றிலும் பொய்யானது என தொண்டி ஆரம்ப சுகாதார நிலைய சுகாதாரதுறை ஆய்வாளர் மற்றும் BMO Dr.வைதேகி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் நபரின் தந்தை கூறுகையில் எனது மகன் சென்னையில் வேலை பார்த்து வந்ததாகவும் தற்பொழுது விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளதாகவும் சென்னையில் உள்ள என் மகனின் நண்பர் கொரோனா சம்மந்தமாக பரிசோதனை செய்துகொள்ள சொன்னதால் எனது மகன் மற்றும் என்னுடைய மனைவி இருவரும் இராமநாதபுரம் அரசு மருத்துவ மனைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டதன் அடிப்படையில் எனது மகனுக்கு கொரோனா தொற்று எதுவும் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.

ஆகவே தொண்டி மற்றும் சுற்றுவட்டார மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை எனவும், மேலும் பொய்யான செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என தெரிவித்தனர். மேலும் வதந்தி பரப்புவார்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments