சுய ஊரடங்கு உத்தரவு: தினக்கூலி பணியாளர்களுக்கு உணவு வழங்கிய நாகூர் இளைஞர்கள்!நாகூரிலுள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து 800 பேருக்கு உணவு தயார் செய்து, அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று கொடுத்து வருகின்றனர்.


இன்று காலை 7 மணி முதல் நாளை காலை 5 மணி வரை மக்கள் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், உணவுக்காக அவதிப்படுவோருக்கு நாகூர் இளைஞர்கள் உணவு வழங்கி வருகின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டன. அந்த அடிப்படையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று நாகூர் தர்கா தற்காலிகமாக மூடப்பட்டது. எதிர்வரும் 31-ம் தேதி வரை தர்காவின் உள்ளே யாருக்கும் அனுமதியில்லை என்று தர்கா நிர்வாகம் அறிவித்தது.

அதையொட்டி அங்கிருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதால், அங்கு தங்கியிருந்த வீடற்றவர்களின் நிலை கேள்விக்குறியானது. சுய ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால், தர்காவிலிருந்து வெளியேற்றப்பட்ட வரியவர்கள் மற்றும் அந்தப் பகுதிவாழ் தினக்கூலி பணியாளர்கள் நிலைமை இன்னும் மோசமானது.


இந்நிலையில், அவர்களின் உணவுத் தேவையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, நாகூரிலுள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து 800 பேருக்கு கோழிக்கறி பிரியாணியும், முட்டையும் தயார் செய்து, அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று கொடுத்து வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments