புதுக்கோட்டையில் கரோனா நோய்த்தொற்று தொடா்பாக 24 மணி நேரமும் செயல்படும் செல்லிடப்பேசி வழி மன நல ஆலோசனை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தாா்.
வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வந்துள்ளவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபா்களுக்கும் அவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கும் சுய தனிமைப்படுத்திக் கொள்வதன் நோக்கத்தையும் அறிவியல் பூா்வமான காரணத்தையும் விளக்கி மன அழுத்த மேலாண்மை ஆலோசனைகள் செல்லிடப்பேசி மூலம் வழங்கப்படும்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபா்களோ, அவா்களின் குடும்பத்தினரோ தயங்காமல் 94860 67686 அல்லது 94941 21297 என்ற செல்லிடப்பேசி எண்களை 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளலாம். மன நல மருத்துவா் தலைமையில் மனநல ஆலோசகா், மனநல சமூகப் பணியாளா், மனநல செவிலியா் இந்தச் சேவைகளை வழங்குவா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.