கோபாலப்பட்டிணம் தெருக்களில் வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு.!



கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் ஊரடங்கு உத்தரவை மதித்து பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே தங்கி உள்ளனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் நேற்று 29.03.2020 குட்டி யானை வாகனம் மூலம் மஞ்சள் கலந்த தண்ணீர் ஊர் முழுவதும் சாலைகள், கட்டிடங்கள், வீடுகள் என பல இடங்களில் கோபாலப்பட்டிணம் ஷாஹீன் பாக் இளைஞர்கள் மூலம் தெளிக்கப்பட்டது. 

கோபாலப்பட்டிணம் நுழைவாயில்களில் கிருமி நாசினி மற்றும் தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டு ஊருக்குள் நுழையும் நபர்கள் கைகளை கழுவுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவுலியா நகர் நுழைவாயில் இளைஞர்கள் தடுப்பு அமைத்து அந்த வழியாகச் செல்வோரை நிறுத்தி கை, கால்களை நன்றாக சோப்பு போட்டு கழுவிய பிறகே ஊருக்குள் அனுமதிக்கின்றனர். மேலும் பொதுமக்கள் வரும் வாகனங்களிலும் கிருமி நாசினி இளைஞர்களால் தெளிக்கப்பட்ட பிறகே ஊருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.









கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments