உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸால் உலக நாடுகள் கடும் அச்சத்தில் உள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்து வருகின்றன.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், கேளிக்கை விடுதிகள், திரையரங்குகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களை வருகிற மார்ச் 31-ஆம் தேதி வரை மூடுவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்திலும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையிலும், அது குறித்து மக்களிடையே அச்சத்தை போக்கும் வகையிலும் பல்வேறு இடங்களில் அரசின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நேற்று 20.03.2020 வெள்ளிக்கிழமை அன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் இளைஞர்கள் சார்பில் கோபாலப்பட்டிணம் உள்ள முக்கிய வீதி வீதியாக சென்று பொதுமக்களுக்கு கொரோனா குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள கொரோனா எவ்வாறு பரவும் எனவும் அது வராமல் எவ்வாறு தற்காத்து கொள்வது போன்றவைகளை விளக்கும் ஆடியோக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் கொரோனாவை கண்டு அச்சப்பட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த கொரோனா பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு அவுலியா நகர் பகுதி, காட்டுகுளம் பள்ளிவாசல் பகுதி, பழைய காலணி, பெரிய பள்ளிவாசல் தெரு, கடற்கரை தெரு போன்ற பகுதிகளில் உள்ள முக்கிய வீதிகளில் இளைஞர்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இந்த விழிப்புணர்வு முகாமில் கொரோனா வைரஸ் சிறுவர்களை எளிதில் தாக்கும் அபாயம் அதிகம் என்பதால் சிறுவர்களை வீட்டை விட்டு வெளியே அனுமதிக்காமல் தவிர்க்குமாறு பெற்றோர்களிடம் வலியுறுத்தப்பட்டது.
![]() |
அவுலியா நகர் |
![]() |
நெய்னா சாச்சா கடை பகுதி |
![]() |
பழைய காலனி பகுதி |
![]() |
கடற்கரை பகுதி |
![]() |
காட்டுகுளம் பகுதி |
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.