மீமிசல் அருகே செய்யானம் ஊராட்சி எல்லை மூடல்.!



ஊராட்சிமன்றத் தலைவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். அதனடிப்படையில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகாமையில் உள்ள செய்யானம் ஊராட்சி எல்லை மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், 'கொரோனா' நோய்த்தடுப்பு பணிகள், ஊராட்சி நிர்வாகத்தினர் தரப்பில் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.அதில், கிராமம் தோறும் கிருமி நாசினி தெளித்தல், கைகளை கழுவுதன் முக்கியத்துவம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.


அதன் ஒருபகுதியாக கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து செய்யானம் செல்லக்கூடிய சாலையில் பேரல்கள் வைத்து மூடப்பட்டுள்ளது. மேலும் அந்த இடத்தில் பேரலில் தண்ணீர் மற்றும் கிருமி நாசினி வைக்கப்பட்டு அந்த வழியாக ஊருக்குள் வருபவர்கள் கையை கழுவி சுத்தம் செய்துவிட்டு வரும் விதமா செய்யானம் ஊராட்சி சார்பாக அமைக்கப்பட்டுள்ளது.  
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments