முத்துப்பேட்டை ஷாஹீன் பாக் தற்காலிமாக ஒத்திவைப்பு.. போராட்டக்குழு அறிவிப்பு..!மத்திய அரசு கொரோனாவை பேரிடராக அறிவித்ததை அடுத்து தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதிகள் என மக்கள் கூடும் இடங்களை மார்ச் 31ஆம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஷாஹீன் பாக் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுமிடம் என்பதால் அரசின் இந்த அறிவிப்பு போராட்டத்திற்கும் பொருந்துகிறது.

எனவே இதுகுறித்து ஆலோசித்த முத்துப்பேட்டை ஐக்கிய ஜமாத்தினர், வருகிற மார்ச் 31 வரை முத்துப்பேட்டை சாஹீன் பாக் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளனர்.

ஆனால் எதிர்ப்பை தொடர்ந்து தெரிவிக்கும் வகையில், வீடுகளில் கருப்பு கொடி கட்டப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments