கோட்டைப்பட்டினத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து நடைபெற்ற பேரணி மற்றும் கண்டன பொதுக்கூட்டம் ..!புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள  குடியுரிமை சட்ட திருத்தத்தை  எதிர்த்து  07.03.2020 சனிக்கிழமை நேற்று பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோட்டைப்பட்டினம் முஸ்லிம் ஜமாஅத், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றம் கழகம், கடற்கரை வட்டார ஜமாத்துல் உலமா சபை மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில் 07.03.2020 சனிக்கிழமை மதியம் 3.00 மணியளவில்  கோட்டைப்பட்டிணம் ECR பள்ளிவாசல் அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு கடை வீதி வழியாக  கோட்டைப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .


பல்வேறு கட்சிகள், சுற்றுவட்டார பொதுமக்கள், ஏராளமான பெண்கள் மற்றும் மதச்சார்பற்ற இயக்கங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இப்பேரணியில் கட்சி  அடையாளங்கள் இன்றி கைகளில் தேசியக் கொடிகளை மட்டுமே ஏந்தி பாஜக கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெறு கோரி முழங்கியபடி பேரணியாக சென்றனர். 


கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துனை செயலாளர், கலைமுரசு அவர்கள், &  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாநில பேச்சாளர் பழனி பாருக் அவர்கள் கண்டன உரையாற்றினர்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோட்டைப்பட்டிணம் ஜமாஅத், பொதுமக்கள், சமூக இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் நிர்வாகிகள் கலந்து கொண்டு கொண்டனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments