அம்மாப்பட்டினத்தில் CAA- NRC- NPR எதிர்ப்பு தெரிவித்து அம்மாவின் ஆன்மாவிற்கு மனு கொடுத்து நூதன போராட்டம்.!குடியுரிமை திருத்த சட்டம் திரும்பபெற கோரியும் CAA- NRC- NPR எதிராகவும் நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தியா மற்றும் தமிழகம் முழுவதும் ஷாகின் பாக் தொடர் இருப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றன.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா அம்மாப்பட்டினத்தில் நேற்று 07.03.2020 சனிக்கிழமை அன்று அ.இ.அ.தி.மு.க நிரந்தர பொதுச்செயலாளர் அம்மாவின் ஆன்மாவிற்கு அம்மாபட்டினம் கிராமத்தார்களின் கோரிக்கை மனு பேரணி நடைபெற்றது. இந்த கோரிக்கை மனு பேரணி அம்மாபட்டிணம் ஷாகின்பாஃக் இருந்து ஆதிபட்டினம் பாலம் வரை சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த அம்மா அவர்களின் புகைப்படத்திற்கு முன் நின்று அம்மாவின் ஆன்மாவிற்கு 'NRC க்கு எதிரான தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்ற மனு கொடுத்தனர். 


ஜெயலலிதா அம்மாவின் ஆன்மாவிடம் மனு கொடுக்கும் நிகழ்வும், குடியுரிமை சட்டத்திற்க்கு ஆதரவாய் பாராளுமன்றத்தில் வாக்களித்த 11MP களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 11 கருப்பு கொடிகள் ஏந்தி ஊர்வலமும் நடைபெற்றது. 


இந்த பேரணியில் அம்மாப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கக்கூடிய மக்கள் பேரணியாக சென்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.

அம்மாபட்டிணம் ஷாஹின்பாக் 20-ம் நாள் நிகழ்வில் ..

மேலும் தொடர் ஷாகின் பாக் தொடர் காத்திருப்புப் போராட்டம் 17.02.2020 அன்று அம்மாப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் பேருந்து நிலையம் அருகில் கடந்த 17.02.2020 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், இந்தச்  சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments