கொரோனா வைரஸ் சுய ஊரடங்கு உத்தரவு எதிரொலி... கோபாலப்பட்டிணம் நிலவரம்.. (வீடியோ & படங்கள்)உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸால் உலக நாடுகள் கடும் அச்சத்தில் உள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.


இன்று (22.03.2020) ஞாயிற்றுக்கிழமை பாரதப் பிரதமரின் ஆணைக்கிணங்க புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் சுய ஊரடங்கு உத்தரவு காரணமாக தெருக்களில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. 


கோபாலபட்டிணத்தில் மக்கள் அதிகமாக கூடும் கடற்கரை, ஆலமரம், போன்ற பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமலும் வெறிச்சோடிய நிலையில் உள்ளது.புகைப்படங்கள் & வீடியோ உதவி: ரபீக், வாசிம்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments