கலால் வரியை அதிகரித்த மத்திய அரசு... பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது...!




பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெய்யின் விலை சரிந்துள்ளது.
ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் விலை தொடர்பான போர் ஒன்றை சவுதி அரசு முன்னெடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனா உட்பட சர்வதேச நாடுகளின் பொருளாதார நடவடிக்கைகள் மந்தமடைந்துள்ளன.

இந்தியா தனது தேவைக்கான கச்சா எண்ணெய்யில் சுமார் 83 சதவிதத்தை இறக்குமதி செய்கிறது. சவுதி அரேபியாவில் இருந்து ஒரு மாதத்திற்கு 12 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்கிறது.

பொதுவாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு டாலர் குறைந்தால் இந்தியாவிற்கு ஆண்டுக்கு சுமார் 10 ஆயிரத்து 700 கோடி செலவு குறையும். ஒரு பேரல் கச்சா எண்ணெய் 10 டாலர் குறைந்தால் பெட்ரோல், டீசல் விலை 5 முதல் 6 ரூபாய் வரை குறைய வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டது.

மிக குறுகிய காலத்தில் சுமார் 14 டாலர் அளவிற்கு கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மிகப்பெரிய அளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், திடீரென பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments